அக்குபஞ்சர் என்றால் என்ன?
Home page :
அக்குபங்சர் என்றால் என்ன?
மனிதன் உயிர் வாழ தேவையானவை
காற்று
நீர்
உணவு
சூரிய வெப்பம்
இந்த நான்கு வித சக்திகள் மட்டுமல்லாமல் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் மிக முக்கியமானது
பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்றால் என்ன ?
பிரபஞ்ச என்பது அனைத்தையும் உள்ளடக்கியது
கண்ணுக்கு தெரியாத மனதால் சிந்தனையால் உணர கூடிய ஆற்றல் ஆகும்
இறை ஆற்றல்,
பேராற்றல் ,
இறை சக்தி ,
இறை ஞானம்,
பஞ்ச பூத ஆற்றல் ,
பஞ்ச பூத சக்தி ,
நட்சத்திரங்கள் ,
கோள்கள்,
விண்துகள்கள்
இது போல கண்ணுக்கு தெரியாத அனைத்து சக்திகளும் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்று கூறலாம்.
அக்குபங்சர் என்றால்
எனவே உடலுக்கும் பிரபஞ்சத்திற்குமான உறவே அக்குபங்சர் ஆகும்.
இந்த பிரபஞ்சமே பஞ்சபூத சக்திகளால் ஆனது.
பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை மின்காந்த சக்தியாக தோல் மூலமாக கிரகித்து உள்ளுறுப்புக்கள் சக்திப் பெறுவதைத்தான் அக்குபங்சர் என்கிறோம்.
பிரபஞ்சத்திலிருந்து மின் காந்த சக்தியாக உடல் கிரகிக்கக்கூடிய இந்த பஞ்சபூத சக்திகள் உடம்பில் சக்திப் பரிமாற்றத்தைச் செய்கின்றன.
இந்த சக்தி பரிமாற்றம், சக்திப் பகிர்வு சமமாக சீராக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த சகதி பரிமாற்றத்தில் ஏற்றத்தாழ்வுகள் (மிகுதல் - குறைதல்) ஏற்பட்டால் அதாவது சக்தி நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடம்புக்கு நோய் ஏற்படுகிறது என்கிறது அக்குபங்சர் மருத்துவம்.
இந்த சக்தி நிலை மாறுபாட்டை சரி செய்வதைத்தான்
அக்குபங்சர் சிகிச்சை என்கிறோம்.
இதனை நான் நம்முடைய முன்னோர் திருவள்ளுவர் திருக்குறளில்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்று சொல்லி உள்ளார் மிக எளிமையாக
இதனுடைய பொருள் :
நமது உடலில்
காற்று , ( வாதம் )
வெப்பம், (பித்தம் )
நீர் ( கபம் )
இவற்றில் எது அதிகமானாலும் குறைந்தாலும் நமது உடலில் நோய் உருவாகும்
Comments
Post a Comment