அக்குபங்சர் வரலாறு & உதாரணம்
அக்குபங்சர் என்பது
சீன மொழியில் Zhen Jiu என்று அழைக்கப்படுகிறது.
சீன மொழியில் Zhen என்பதற்கு தூண்டுதல் என்று அர்த்தமாகும் Jiu என்பதற்கு மிகச்சரியாக என்று அர்த்தமாகும்.
Zhen+Jiu- Zhenjiu
Zhenju என்கிற வார்த்தை எப்படி அக்குபங்சர் என்ற வார்த்தையாக உருவானது என்பதைப் பார்ப்போம்.
அக்குபங்சர் என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து
ஆங்கிலத்திற்கு வந்த சொல்லாகும்.
இலத்தீன் மொழியில்
Accus - என்ற வார்த்தை ஊசி போன்ற
கூர்மையான பொருளைக்குறிக்கிறது.
PUNCTURA - என்ற வார்த்தைக்கு குத்துதல்
அல்லது தூண்டுதல் என்பது பொருளாகும்.
இந்த இரண்டு வார்த்தைகளின் இணைவிலிருந்து வந்ததுதான்
அக்குபங்சர்.
ACCUS+PUNCTURA = ACUPUNCTURE -
உடலில் மறைவாக இருக்கும் சக்தி நாளங்களில்
உள்ள சக்திப் புள்ளிகளைக் கூர்மையான ஊசியின் மூலமோ அல்லது விரலின் நுனியின் மூலமோ தூண்டி அவற்றுக்குச் சக்தியளிப்பதே அக்குபங்சர் சிகிச்சையாகும்.
சிகிச்சை அளிக்கும் நபர், நோயாளி பூரண குணம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் சிகிச்சை பெறும் நபர் தனக்குப் பூரண குணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருந்தால் உடலில் அற்புதமான விளைவுகள் ஏற்பட்டு நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.
பிரபஞ்ச சக்தியை உடல் கிரகிக்கிறது என்பதையும் அக்குபங்சர் சிகிச்சை வேலை செய்கிறது என்பதையும் எப்படி நம்புவது?
கண்களால் பார்க்க முடியாததை உணர்தல் மூலம்தான்
நம்பமுடியும்.
இதனை ஒரு உதாரணத்தின் மூலம்
உணர்வோம்.
எவ்வளவு சோம்பலாக இருந்தாலும், களைப்பாக
இருந்தாலும் தண்ணீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளும்போது சுறுசுறுப்படைகிறோமே எப்படி?
ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டால் உடனே அவர் முகத்தின் மீது தண்ணீர் தெளிக்கிறோம். அவரது
மயக்கம் தெளிவடைகிறது எப்படி?
உதாரணமாக
சாதாரண பாட்டரி வயரை நாம் தொடும்போது அதிலுள்ள மின்சக்தியை நாம் உணர்கிறோம்.
அதே அளவு மின்சக்தியை நாம் ஈரக்கையால் தொட்டால் இன்னும் கூடுதலான மின் சக்தியை உணர்கிறோம்.
அப்படியானால் ஈரமானது மின்சக்தியை வேகமாக கிரகிக்கிறது என்பதை அறிகிறோம்.
வாயு மண்டலத்தில் உள்ள மின் காந்த சக்தியை உடலானது தோல் மூலமாகக் கிரகிக்கிறது.
முகத்தில் ஆறு உள்ளுறுப்புக்களின் சக்திப் புள்ளிகள் உள்ளன.
முகத்தைத் தண்ணீரால் கழுவும் போது முகத்தில் உள்ள சக்திப்புள்ளிகள் நனைந்து ஈரப்பதமாவதால் உடனே வெளிப்புற மின்காந்த சக்தியை உடல் வேகமாக கிரகித்து உள்ளுறுப்புகளுக்கு சக்தியைத் தருகின்றது.
இதனால் முகம் கழுவியதும் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தண்ணீர் தெளித்ததும் மயக்கம் தெளிவது இவ்வகையில் தான், அதே அடிப்படையில் தான் குளித்ததும் புத்துணர்வு அடைகிறோம்.
"நமது உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் ஈரப்பதம் இருக்கும் வரையில்தான் வெளியுலகிலிருந்து மின்காந்த சக்தியானது உறிஞ்சப்படும்
வியர்வைத் துவாரங்கள் எந்த நிலையிலும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
காரணம் ஒவ்வொரு வியர்வைச் சுரப்பியும் வெளிப்புற மின் சக்தியை உடலுக்குள் ஈர்க்கக் கூடிய அக்குபங்சர் புள்ளிகளாகும்.
அக்குபங்சர் சக்திப் புள்ளிகளாக விளங்கக் கூடிய வியர்வை துவாரங்கள் ஈரப்பதம் குறைந்து காய்ந்து விடாமலிருக்க இயற்கையாகவே ஒவ்வொரு வியர்வைச் சுரப்பியுடனும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன.
எண்ணெயச் சுரப்பிகள் தான் நமது உடலின் அக்குபங்சா புள்ளிகளை (வியர்வைத் துவாரங்களையும், வியர்வைச் கரப்பிகளையும்) திறன் குறையாமல் இயக்கம் கொள்ள வைக்கிறது"
உடலின் மேல்தோலானது பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும் தன்மையைக் கண்ணால் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்,
ஆரோக்கியம் என்பது பிரபஞ்ச சக்திக்கும் உடலுக்கும் உள்ள உறவைச்சார்ந்தது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைச் சார்ந்தது என்கிறது அக்குபங்சர் மருத்துவம்
Comments
Post a Comment